தஞ்சைபெரிய கோவிலைப்போன்று சோழ மன்னால் கட்டப்பட்ட மர்மங்கள் நிறைந்த மற்றும் ஒரு கோவில்...


தஞ்சைபெரிய கோவிலைப்போன்று சோழ மன்னால் கட்டப்பட்ட மர்மங்கள் நிறைந்த மற்றும் ஒரு கோவில்...  ஆச்சிரியங்களும் மர்மங்களும் நிறைந்த கோவிலைப்பற்றி  காணலாம். 

அறிவியலுக்கும் புலப்படாத பல மர்ம முடிச்சுக்கள் கொண்டு, மர்ங்களால் சூழ்ந்து இருக்கும் கோவில் பூரி ஜெகந்நாதர் ஆலயம். அந்த கோவிலில் அப்படி என்னென்ன மர்ம அதிசயங்கள் இருக்கின்றன என்பது பற்றி விரிவாகப்  பார்க்கலாம்




ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வைணவத் தலம் தான் இந்த பூரி ஜெகநாதர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஜெகன்நாதர், பாலபத்திரர்(பலராமர்) மற்றும் சுமித்திரை தேவி இவர்கள் மூவரும் ஒரே கருவறையில் மூலவராக காட்சி தருகின்றனர்.  மற்ற இந்து கோயில்களை போல இல்லாமல் ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவரின்  சிலையானது புனித வேப்ப மரம் என்றழைக்கப்படும் தாரு பிரமத்தினால் செய்யப்பட்டதாகும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மூலவரின் சிலை அதே மரத்தினால் மறுவுருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிர்ஷ்டை செய்யப்படுகிறது.  ஆனால் இங்கு உள்ள சிலைகள் அனைத்தும் முழுமை பெறாததாகவே காட்சி தருகிறது.






அறிவியலுக்கே சவால் விடுகின்ற, புலப்படாத பல மர்ம முடிச்சுகள் கொண்ட கோவில் தான் பூரி ஜெகந்நாதர் கோவில். இந்த கோவில் சோழ மன்னன் அனந்தவர்மன் சோதங்கதேவன் என்னும் தமிழ் மன்னரால் 1135ல் கட்ட தொடங்கப்பட்டு 1200 ஆம் ஆண்டில் அவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் கட்டி முடிக்கப்பட்டது. பல வித்தியாசமான கட்டிடக் கலைகளை உள்ளடக்கிய பல்வேறு கோவில்களை தமிழ் மன்னர்கள் உலகமெங்கும் கட்டியிருக்கிறார்கள். இதை ஏன் ஒடிசாவில் சென்று தமிழன் கட்டியிருக்கிறான் என்பதும் யோசிக்க வேண்டியிருக்கிறது.




இந்த கோவிலின் பிரதானமாக இருப்பது கிருஷ்ணர் தான். அதனால் இங்கு மூலவராக கிருஷ்ணரும் யசோதையும் பலராமனும் இருக்கிறார்கள். இந்த மூவரும் தான் இங்கு பிரதான வழிபாட்டுக்கு உரியவர்களாக இருக்கிறார்கள். அதோடு அறிவியலாளர்களாலேயே  யூகிக்க முடியாத சில மர்ம முடிச்சுகள் இந்த கோவிலைச் சுற்றிலும் இருக்கின்றன. 

உலகிலேயே வேறு எந்த கோவிலிலும் இல்லாத படி, இந்த பூரி ஜெகந்நாதர் கோவில் கருவறையில் நிறைய மரத்தாலான சிலைகள் இருக்கின்றன. உலகிலேயே இதுபோன்ற அமைப்பு வேறு எந்த கோவில்களிலும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதேபோல இந்த மூலவர் சிலைகள் முழுமையடையாத நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான காரணமும் தெரியாமலேயே மர்மமாகவே இருக்கிறது.




பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கோவிலில் நவகலே பரா என்ற பெயரில் மிக பிரமாண்டமாக திருவிழா நடத்தப்படும். அதில் ஒவ்வொரு திருவிழாவின் போது, இந்த மூலவர் சிலைகள் புதிதாக செய்யப்படுகின்றன. அதற்கான காரணமும் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து அதை பாரம்பரிய வழக்கங்களில் ஒன்று போல மாற்றிவிட்டார்கள்.

தஞ்சை பெரிய கோவிலின் கோபுர நிழல் கீழே விழாமல் இருக்கும். அதனை சோழர் கால கட்டடக் கலைக்குச் சிறந்த உதாரணமாகச் சொல்லுவோம். அதேபோல தான் இந்த பூரி ஜெகந்நாதர் கோவிலின் கோபுர நிழலும் எப்படி சூரியன் சுட்டெரித்தாலும் தரையில் விழுவதில்லை. கோயில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில், எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோயிலின் உச்சியில் இருக்கும் சுதர்சனசக்கரம் நம்மைக் காண்பது போலவே இருக்கும்.



பொதுவாக கோவில் கோபுரங்களைச் சுற்றி  புறாக்ககள் , கழுகுகள்  போன்ற பறவைகள் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் இந்த கோவில் கோபுரங்களைச் சுற்றி எந்த பறவைகளும் பறப்பதில்லையாம். அதேபோல் இந்த கோபுரத்தின் மீது எந்த பறவைகளும் அமருவதே கிடையாதாம். அது ஏன் என்ற கேள்விக்கு இன்றும் யாருக்கும் விடை தெரியாத மர்மமாகவே இருந்து வருகிறது.

பொதுவாக கொடிகள் காற்று வீசும் திசையை நோக்கிப் பறக்கும். ஆனால் இந்த கோவில் கொடிமரத்தில் உள்ள கொடி காற்று வீசும் திசைக்கு நேர் எதிர் திசையில் வீசுகிறது. இதை பல அறிவியலாளர்கள் ஆய்வு செய்து பார்த்தும் புரியாத புதிராகவே இருக்கிறது.

கடற்கரையை ஒட்டி தான் இந்த கோவில் அமைந்திருக்கிறது. ஆனால் மிக ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால்,  சிங்கத்துவாராவின் முதல்படியில் கோயிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலின் அலை சத்தம் கொஞ்சம் கூட கேட்காதாம் ஆனால் அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோயிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்குமாம். இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும் என்பது வியப்பான ஒன்று!


பொதுவாக காலையில் இருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும்.

இந்த கோவிலில் குடிகொண்டிருக்கும் விஷ்ணு பகவான், தினமும் காலையில் எழுந்து ராமேஸ்வரம் சென்று விட்டு, மதிய உணவுக்கு மீண்டும் இந்த பூரி ஜெகந்நாதர் ஆலயத்துக்கு வந்துவிடுவதாக ஒரு ஐதீகம் உண்டு. அதனால் தினந்தோறும் இந்த கோவிலில் இறைவனுக்கான விருந்து மிகவும் தடபுடலாக செய்யப்படுகிறது. இந்த விருந்து சமைக்கும் முறையே சற்று வித்தியாசமானது. தனித்தனி பாத்திரமாக இல்லாமல் ஏழு பாத்திரங்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, ஏழுலிலும் சமையல் செய்கிறார்கள். பொதுவாக அடியில் தீ எரிந்து கொண்டிருந்தால் அடியில் இருக்கும் பாத்திரத்தில் உள்ள உணவு தான் முதலில் ரெடியாகும். ஆனால் இங்கு இதிலும் சில அதிசயம் நடக்கிறது. மேலே முதலில் இருக்கும் பாத்திரத்தில் உள்ள உணவு தான் முதலில் வெந்து தயார் நிலைக்கு வருமாம். ஆலயத்தின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும் ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை கூடினாலும் குறைந்தாலும் சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதுமில்லை. மீந்து போய் வீணாவதும் இல்லை என்கிறார்கள்.



இந்த கோவிலின் தேர்த் திருவிழாவின் பொழுது, பூரி மன்னரின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள், தங்கத்தினால் ஆன துடைப்பத்தைக் கொண்டு, கோவிலையும் அதைச் சுற்றியுள்ள பாதை, தெருவையும் சுத்தம் செய்வார்களாம். இங்கு தேரும் ஒவ்வொரு முறை திருவிழாவின் போதும் புதிது புதிதாகவே செய்யப்படுகிறது. இது எப்படி சாத்தியம் என்பது அவர்களுக்கே வெளிச்சம். இதற்கான காரணமும் இன்று வரை யாருக்கும் புலப்படவே இல்லை. 

எந்த வகையான கிரக தோஷத்தை உடையவர்களாக இருந்தாலும் இந்த கோவிலில் உள்ள ஜெகநாதரை தரிசித்தால் அந்த தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பூர்வஜென்ம காலத்தில் செய்த பாவங்களும் நீங்கி, நிம்மதியான வாழ்க்கையினை வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இன்றளவும் இருந்துவருகிறது. செல்லும் வழி புவனேஸ்வரத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூரி என்ற இடத்தில் இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது.  இவ்வாலயத்திற்குச் செல்ல மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களிலிருந்து தொடருந்து டிரைன் வசதிகள் உள்ளன. தரிசன நேரம்: காலை 05.30AM – 12.00PM மாலை 05.30PM – 08.00PM  முகவரி: பூரி ஜெகநாதர் ஆலயம், கிராண்ட் சாலை, ஒடிசா 752001, இந்தியா. தொலைபேசி எண் +91-651-2400981



இத்தனை மர்மங்களும் நிறைந்த இந்த கோவில், சோழ மன்னனால் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்பது இன்னும் கூடுதல் ஆச்சர்யம்.

மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான காணொலியை அறிந்துக் கொள்ள நமது சேனலை சர்ப்கிரைப் செய்யுங்கள். மறக்காம பெல் பட்டன கிளிக் பண்ணுங்க, தங்கயூ

Youtube Video





 

Comments

Popular posts from this blog

தாவூத் ஷா: தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை

ஆடி அடங்கும் வாழ்கையடா ஆறடி நிலமே... சொந்தமடா... இன்று சீர்காழி எஸ், கோவிந்தராஜன் நினைவு தினம் மார்ச் 24, 1988

முட்டு கிடா களம் - 4 | வீரத்தின் அடையாளம் முட்டு கிடா வளர்ப்பு | MADURAI ANCIANT SHEEP FIGHT