சிவனை அபிஷேகம் செய்யும் நந்தி பகவான் | நந்தி தீர்த்த கோவில் | Nandi theertha temple
- Get link
- X
- Other Apps
400 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து நீர் வழியும் அதிசயம் - எங்கியிருந்து அந்த நீர் வருகிறதென்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை
இப்படி விசித்திரமான நந்தி கோயிலை பற்றி இங்கு பார்க்க இருக்கிறோம். இது இனியவை ஆயிரம். இந்த வீடியோ பிடித்திருந்தால் மறக்காம நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணுங்க, பெல் பட்டன கிளிக் பண்ணுங்க
தொன்மையான கோவில்களில் உள்ள அதிசயமான கட்டுமான அமைப்புகள் அல்லது இயற்கைக்கு மாறாக இருக்கும் புதிரான நிகழ்வுகள் ஆகியவை பற்றி அவ்வப்போது நாம் கேள்விப்படுவது உண்டு. நமது முன்னோர்களால் அமைக்கப்பட்ட பெரும்பாலான கோவில்களில் அறிவியலின் நுட்பமான பார்வைக்கும் புலப்படாத ஏதேனும் ஒரு ஆச்சரியம் இருப்பதுண்டு.
இந்தியாவில் பல வரலாற்று சிறப்பு மிக்க கோயில்கள் உள்ளதோடு, வியக்க வைக்கும் பல கட்டிடக் கலை கொண்ட கோயில்கள் ஏராளம்.
அந்த வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒரு கோவில் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. அங்குள்ள மல்லேஸ்வரம் என்ற ஊரில் அமைந்த தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோவிலில், நந்தி சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நந்தி சிலை அமைப்பில் அதிசயம் எதுவுமில்லை. ஆனால், எல்லா சிவாலயங்களிலும், நந்தி சிவபெருமானுக்கு எதிராக தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஸ்ரீ தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி திருக்கோயிலில், நந்தி பெருமானோ சிவ லிங்கத்திற்கு மேல் உள்ள தளத்தில் அதாவது நேர் மேலே அமைக்கப்பட்டுள்ளது. அதைவிடவும் அதிசயம் என்ன வென்றால் அந்த நந்தியின் வாயிலிருந்து எப்போதும் நீர் ஊற்றாக ஊறி கொட்டிக் கொண்டிருப்பது தான், அந்த நீர் கீழே உள்ள சிவ லிங்கத்தின் தலையில் விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இது ஆச்சரியமானதாக இருந்தாலும், அதிசயமாக இருப்பது நந்தியின் வாயிலிருந்து எப்போதுமே நீர் ஊற்றாக பெருகி வழிந்து வருவதுதான். அதுவும் ஒருநாள், இரண்டு நாள் அல்ல. ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல.. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நந்தி பகவானின் வாயிலிருந்து வழியும் நீரால் நித்தமும் சிவபெருமானை அபிஷேகம் செய்யும் ஆச்சர்யம் நடந்து கொண்டிருக்கின்றது. சிவபெருமானுக்கு அபிஷேகமாக மாறிய பிறகு அந்த நீர் அங்கு எதிரில் அமைந்துள்ள கோவில் தீர்த்தக்குளத்தில் சென்றடையும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
நந்தி தீர்த்தம் விழும் சிவலிங்கத்திற்கு என்று தனி சன்னதியோடு, இந்த கோயிலில் விநாயகருக்கு என்று தனி சன்னதியும், நவகிரகத்திற்கு என்று சன்னதிகள் உண்டு.
இந்த கோயில் மொத்தமே ஒரு குளத்தை சுற்றி முடிந்து விடுகின்றது
சிவன் கோயிலில் பொதுவாக நந்தி பகவானுக்கு தான் பிரதோஷம் மிகவும் விஷேச அபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால் இந்த கோயிலில் நந்தி பகவானின் வாயிலிருந்து வழியும் நீரால் நித்தமும் சிவபெருமானை அபிஷேகம் செய்யும் ஆச்சர்யம் நடந்து கொண்டிருக்கின்றது.
நந்தியின் வாயில் இருந்து பெருகிவரும் ஊற்று நீர் எப்போதும் சிவலிங்கத்தின் மீது படும்படி மிகவும் சரியாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது. தரைமட்டத்தில் இருந்து தாழ்வாக இந்த நந்தி கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பல ஆண்டுகள், இந்த கோயில் வெளியில் தெரியாமல், சேற்றில் புதையுண்டு கிடந்துள்ளது. அதனை, 1997ம் ஆண்டு சில தன் ஆர்வலர்கள் கண்டுபிடித்து கோயிலை, மீட்டெடுத்துள்ளனர். மேலும், அந்த தீர்த்தத்தில் அபூர்வ சக்தி இருப்பதாகவும், அதை பருகினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.
இக்கோயில் தரைக்கடியில் 2 தளமாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, 1882ம் ஆண்டு, ராவ் பகதுர் மல்லப்பா ஷெட்டி என்பவர், இந்த கோயிலில் உள்ள நந்தி மற்றும் அதன் வாயில் வழியும் நீர் வடிவமைப்பை ஏற்படுத்தியுள்ளார் என்றும். பாதாள சாக்கடைத் திட்டம் போல, பூமிக்கடியில் இருந்து நீர் ஊற்றை திசைதிருப்பி, நந்தியின் வாய் வழியே, குழாய் மூலமாகப் பாய்ந்து, பின்னர், நந்திக்கு கீழே உள்ள கல்யாணி தொட்டியில் அது சேர்ந்து, அதில் இருந்து, அதற்கும் கீழே உள்ள லிங்கத்தின் தலையில் வடிவதுபோல, இதனை வடிவமைத்துள்ளதாகவும் லிங்கத்தில் ஊற்றும் தண்ணீர், படிப்படியாக, வெளியேறி, கோயிலின் வெளியே உள்ள குளத்தில் சென்று சேரும்படி, இதனை மாற்றியமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான கருத்துக்களும் நிலவி வர தான் செய்கின்றன.
இக்கோவிலுக்கு செல்ல விரும்புவர்கள் ரயில் மூலமாகவும் செல்லலாம், பல்வேறு மாநிலங்களிலிருந்து பெங்களூரு மெஜஸ்டிக் ரயில் நிலையத்திற்கு ரயில்கள் இயக்கப்படுகின்றது. அதனால் மெஜஸ்டிக் ரயில் நிலையத்திற்கு வந்தால் அதன் எதிரே உள்ள மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் கோயிலை அடையலாம். மேலும் இத்திருக்கோயில் பெங்களூரு நகரத்திற்குள்ளேயே அமைந்துள்ளதால், சாலை மார்க்கமாக வந்தால், வெறும் 5 கிமீ தூரத்தில் இந்த கோயிலை எளிதாக அடைய முடியும்.
எது எவ்வாறாக இருந்தாலும் கோயில்கள் எப்பொழுதுமே நமக்கு ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் தருவதோடு மனத்திற்கு அமைதியையும் அளிக்க வல்லது என்பது யாராலும் மறுக்கவோ மாற்றவோ இயலாது
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment