தஞ்சைபெரிய கோவிலைப்போன்று சோழ மன்னால் கட்டப்பட்ட மர்மங்கள் நிறைந்த மற்றும் ஒரு கோவில்...

Image
தஞ்சைபெரிய கோவிலைப்போன்று சோழ மன்னால் கட்டப்பட்ட மர்மங்கள் நிறைந்த மற்றும் ஒரு கோவில்...  ஆச்சிரியங்களும் மர்மங்களும் நிறைந்த கோவிலைப்பற்றி  காணலாம்.  அறிவியலுக்கும் புலப்படாத பல மர்ம முடிச்சுக்கள் கொண்டு, மர்ங்களால் சூழ்ந்து இருக்கும் கோவில் பூரி ஜெகந்நாதர் ஆலயம். அந்த கோவிலில் அப்படி என்னென்ன மர்ம அதிசயங்கள் இருக்கின்றன என்பது பற்றி விரிவாகப்  பார்க்கலாம் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வைணவத் தலம் தான் இந்த பூரி ஜெகநாதர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஜெகன்நாதர், பாலபத்திரர்(பலராமர்) மற்றும் சுமித்திரை தேவி இவர்கள் மூவரும் ஒரே கருவறையில் மூலவராக காட்சி தருகின்றனர்.  மற்ற இந்து கோயில்களை போல இல்லாமல் ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவரின்  சிலையானது புனித வேப்ப மரம் என்றழைக்கப்படும் தாரு பிரமத்தினால் செய்யப்பட்டதாகும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மூலவரின் சிலை அதே மரத்தினால் மறுவுருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிர்ஷ்டை செய்யப்படுகிறது.  ஆனால் இங்கு உள்ள சிலைகள் அனைத்தும் முழுமை பெறாததாகவே காட்சி தருகிறது. அறிவியலுக்கே சவால் விடுகின்ற, புலப்படாத பல மர்ம முடிச்சுகள் கொண்ட கோவில்

பாண்டியர்கள் செதுக்கிய அதிசயம்


கழுகுமலை வெட்டுவான் கோயில்



கழுகுமலையின் சிறப்பு, அந்த மலையின் பின்புறம் அமைந்து உள்ள ‘வெட்டுவான் கோயில்’ ஆகும். மலையின் ஒரு பகுதியில் பாறையை வெட்டி, அந்த ஒற்றைப் பாறையிலேயே ஒரு கோயிலைச் செதுக்கி இருக்கிறார்கள். அதுதான், ‘வெட்டுவான் கோயில்’ என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய கோயில், தமிழகத்திலேயே இது ஒன்றுதான் என்பதுவே, கழுகுமலையின் மாபெரும் சிறப்பு ஆகும். இந்தியாவிலேயே கழுகுமலையைத் தவிர, மராட்டிய மாநிலம் எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவில் மட்டுமே, மலைக் குடைவரைக் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையை குடைந்து குகை கோயிலை பாண்டிய மன்னர்களால் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குடைவரை கோயில் மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளதால் மேலிருந்து கீழாக கட்டப்பட்டுள்ளது. முதலில் கோபுரம், பின்னர் அப்படியே கீழாக சென்று சிற்பங்கள், கருவறை, அடித்தளம் போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இக்கோயில் தமிழர்களின் கட்டத்திறைமைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். ஒரே கல்லினால் ஆன கோயில் என்பது தான் சிறப்பு, ஒரு பெரிய மலையை ப வடிவில் செதுக்கி அதில் 7.50 மீட்டருக்கு சதுரமாக வெட்டி கோயிலை மேலிருந்து கீழாக வெட்டி அற்புதமாக உருவாக்கியுள்ளனர்.

சங்கரன்கோவில்-கோவில்பட்டி சாலையில், இரு நகரங்களுக்கும் நடுவே அமைந்து உள்ளது கழுகுமலை பேரூர். மலையின் பின்பகுதியில் உள்ள படிக்கட்டுகளின் வழியாக மேலே ஏறினால், பதினைந்து இருபது நிமிடங்களுக்கு உள்ளாக ஏறி விடலாம். மலையின் நடுவே ஓரிடத்தில், வரிசையாகப் பல சிலைகள் செதுக்கப்பட்டு உள்ளன. சமணர்கள், தங்கள் குரு, தாய், தந்தை ஆகியோரின் நினைவாக, இங்கே சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளைச் செதுக்கி உள்ளனர். இச்சிற்பங்களின் கீழே, அவற்றைச் செதுக்கியவர்களின் பெயர்கள் தமிழ் வட்டு எழுத்துகளில் பொறிக்கப்பட்டு உள்ளன. சிறுசிறு குகைகளும் உள்ளன.


அங்கே அமைந்து இருந்த சமணர் பள்ளிகளில், சமண மதக் கருத்துகளைப் போதித்தனர். வெட்டுவான் கோயில், ஒரே கல்லில் செதுக்கப்பட்டு உள்ளது.கழுகுமலையின் ஒரு பகுதியில், 7.50 மீட்டர் ஆழத்துக்குச் சதுரமாக வெட்டி எடுத்து, அதன் நடுப்பகுதியைக் கோவிலாகச் செதுக்கி உள்ளனர். ஆனால் அந்தக் கோவிலின் பணி முழுமையாக நிறைவு பெறவில்லை. இதில், கரு அறையும், அர்த்த மண்டபமும் உள்ளன. கோவில் கோபுரத்தில், உமா மகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா வடிவங்கள் காணப்படுகின்றன. விமானத்தின் மேற்குத்திசையில் நரசிம்மரும், வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர்.

விமானத்தின் நான்கு மூலைகளில் நந்தி சிலைகளும், இவற்றுக்குக் கீழே யாளி வரிகளும், கபோதகமும் உள்ளன. பராந்தக நெடுஞ்சடையன் என்ற மன்னனின் காலத்தில், கழுகுமலையில் சிற்பங்களைச் செதுக்கி இருக்கிறார்கள். 

கழுகுமலையில், மூன்று நினைவுச் சின்னங்கள் உள்ளன. 

சமணர் பள்ளி  -  வெட்டுவான் கோயில் - முருகன் கோயில் 

மலையின் பழம்பெயர் : அரைமலை’. 

இன்றைய பெயர் : கழுகுமலை’.

ஊரின் பழம்பெயர்: பெருநெச்சுறம் அல்லது திருநெச்சுறம். 

நாட்டுப் பிரிவு:  இராஜராஜப்பாண்டி நாட்டு, முடிகொண்ட சோழவளநாட்டு, நெச்சுறநாட்டு நெச்சுறம்.
ஊரில் குறிக்கப்பட்டு உள்ள அரசர்கள்:

பாண்டியன் மாறஞ்சடையன் (பராந்தகநெடுஞ்சடையன்) 
பாண்டியன் மாறஞ்சடையன் (பராந்தகவீரநாராயணன்). 

கழுகுமலையின் அடிவாரத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோயில் உள்ளது. இதன் மூலவர் இருக்கின்ற இடமும் ஒரு குடைவரைதான். இந்தக் கோவிலின் தெப்பக் குளத்தில், பால் போன்ற நிறத்தில் நல்ல குடிநீர் கிடைக்கிறது. அதுதான், இந்த ஊர் மக்களின் குடிநீராக, அண்மைக்காலம் வரையிலும் பயன்பட்டு வந்தது. எனவே, அந்தக் குளத்தைத் தூய்மையாகப் பராமரித்து வருகிறார்கள். இப்போது, தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வருகிற திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.

Comments

Popular posts from this blog

தாவூத் ஷா: தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை

ஆடி அடங்கும் வாழ்கையடா ஆறடி நிலமே... சொந்தமடா... இன்று சீர்காழி எஸ், கோவிந்தராஜன் நினைவு தினம் மார்ச் 24, 1988

முட்டு கிடா களம் - 4 | வீரத்தின் அடையாளம் முட்டு கிடா வளர்ப்பு | MADURAI ANCIANT SHEEP FIGHT