Posts

Showing posts from March, 2020

தஞ்சைபெரிய கோவிலைப்போன்று சோழ மன்னால் கட்டப்பட்ட மர்மங்கள் நிறைந்த மற்றும் ஒரு கோவில்...

Image
தஞ்சைபெரிய கோவிலைப்போன்று சோழ மன்னால் கட்டப்பட்ட மர்மங்கள் நிறைந்த மற்றும் ஒரு கோவில்...  ஆச்சிரியங்களும் மர்மங்களும் நிறைந்த கோவிலைப்பற்றி  காணலாம்.  அறிவியலுக்கும் புலப்படாத பல மர்ம முடிச்சுக்கள் கொண்டு, மர்ங்களால் சூழ்ந்து இருக்கும் கோவில் பூரி ஜெகந்நாதர் ஆலயம். அந்த கோவிலில் அப்படி என்னென்ன மர்ம அதிசயங்கள் இருக்கின்றன என்பது பற்றி விரிவாகப்  பார்க்கலாம் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வைணவத் தலம் தான் இந்த பூரி ஜெகநாதர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஜெகன்நாதர், பாலபத்திரர்(பலராமர்) மற்றும் சுமித்திரை தேவி இவர்கள் மூவரும் ஒரே கருவறையில் மூலவராக காட்சி தருகின்றனர்.  மற்ற இந்து கோயில்களை போல இல்லாமல் ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவரின்  சிலையானது புனித வேப்ப மரம் என்றழைக்கப்படும் தாரு பிரமத்தினால் செய்யப்பட்டதாகும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மூலவரின் சிலை அதே மரத்தினால் மறுவுருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிர்ஷ்டை செய்யப்படுகிறது.  ஆனால் இங்கு உள்ள சிலைகள் அனைத்தும் முழுமை பெறாததாகவே காட்சி தருகிறது. அறிவியலுக்கே சவால் விடுகின்ற, புலப்படாத பல மர்ம முடிச்சுகள் கொண்ட கோவில்

மீன ராசிபலன் : 29.3.2020 முதல் 4.4.2020 வரை

Image
மீனம்: அமைதியான வாழ்வை விரும்பும் மீனராசி அன்பர்களே! புத்திரர்களிடம் அனுசரித்து செல்லவும். மனதில் உத்வேகமும் செயல்களில் வசீகரமும் ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்வு உண்டாகும். புத்திரரின் விருப்பங்களை பணவசதிக்கேற்ப நிறைவேற்றுவீர்கள். எதிரியால் இருந்த தொந்தரவு குறையும். எதிர்கால தேவை கருதி பணம் சேமிக்கவும் செய்வீர்கள். உறவினர்கள் நல்ல ஆலோசனை சொல்வர். மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்த்து படிப்பில் சிறப்பிடம் பெறுவர். மனைவியின் அன்பு பாசத்தில் மனம் நெகிழ்வீர்கள். தொழில் வியாபாரம் அபரிமிதமாக  செழித்து வளரும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதில் பூர்த்தி செய்வர். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். பரிகாரம்:  சாஸ்தா வழிபாடு சகல நலமும் தரும்.

கும்ப ராசிபலன் : 29.3.2020 முதல் 4.4.2020 வரை

Image
கும்பம்: பணியை நேர்த்தியுடன் மேற்கொள்கின்ற கும்பராசி அன்பர்களே! உறவினர்களால் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நண்பரால்  உதவி உண்டு.  திட்டமிட்ட பணி இஷ்ட தெய்வ அருளால் நிறைவேறும். வாழ்வியல் நடைமுறை சிறப்பாகும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வாகனத்தில் மிதவேகம் நல்லது. புத்திரர்  விரும்பிய பொருள் வாங்கித்தருவீர்கள்.மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். மனைவி உங்களின் நல்ல குணங்களை பாராட்டுவார். தொழிலில்  உற்பத்தி விற்பனை அதிகரித்து பணவரவு கூடும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிவர்.சலுகையும் கிடைக்கும். பெண்கள் குடும்ப நலன்களை பேணிக்காத்திடுவர். பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.

மகர ராசிபலன் : 29.3.2020 முதல் 4.4.2020 வரை

Image
மகரம்: மாற்றுத்திட்டத்தால்  அதிக நன்மை பெறும் மகரராசி அன்பர்களே! நண்பர்களுடன் கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். மனதில் தைரியம் வளரும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். தாயின் மனமறிந்து தேவையான உதவியை வழங்குங்கள். புத்திரரை இதமாக வழி நடத்தி படிப்பு செயல்திறனில் முன்னேற்றுவீர்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் வேண்டும். குலதெய்வ அருள் துணை நின்று உதவும். நண்பர்க்கு கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். சீரான ஓய்வில் உடல்நலத்தை பாதுகாத்திடுவீர்கள். மனைவியின் மனதில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரம் அதிக உழைப்பால் நல்ல வளர்ச்சி பெறும்.   பணியாளர் பணியிடத்தின் சூழல் உணர்ந்து பணிபுரிவர். பெண்கள் இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர். பரிகாரம்: மீனாட்சி வழிபாடு வெற்றியளிக்கும்.

தனுசு ராசிபலன் : 29.3.2020 முதல் 4.4.2020 வரை

Image
தனுசு: புதிய கருத்துக்களை மனதார வரவேற்கும் தனுசுராசி அனபர்களே! குடும்ப உறுப்பினர்களுக்கிடையே விவாதங்கள் தோன்றி மறையும். அன்புக்கு உரியவரின் ஆலோசனை உற்சாகம் தரும். மனதில் தெளிந்த சிந்தனை பிறக்கும். வெளியூர் பயணம் தாமதமாகும். புத்திரர் பெற்றோர் சொல் கேட்டு  செயல்படுவதில் தயக்கம் கொள்வார். பணப்பரிவர்த்தனை அளவுடன் இருக்கும். உடல் ஆரோக்கியம்  சீராக இருக்கும்.  எதிர்ப்பாளர் சொந்த சிரமங்களால் விலகுவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளிலும் ஆர்வம் கொள்வர். மனைவியின் சொல்லும் செயலும் குளறுபடியை உருவாக்கலாம். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வதற்கான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் அதிக வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்வர். பெண்கள் பிள்ளைகளின் நலன்களை பேணிக்காத்திடுவர். பரிகாரம் :  சனீஸ்வரர் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிக ராசிபலன் : 29.3.2020 முதல் 4.4.2020 வரை

Image
விருச்சிகம்: துன்பம் அடைந்தவருக்கு ஆறுதலாக உதவும் விருச்சிகராசி அன்பர்களே! மனைவியின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். உடன்பிறந்தவரின் கருத்தை விமர்சிக்க வேண்டாம். மன அமைதியை பாதுகாக்கவும். புதிய வீடு வாகனம் வாங்குவதில் தாமதம் ஏற்படலாம். புத்திரர் சில விஷயங்களில் பிடிவாதமுடன் நடந்து கொள்வர். இஷ்டதெய்வ வழிபாடு சில நன்மைகளை பெற உதவும். வழக்கு விவகாரத்தில் சமயோசித செயலால் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் வேண்டும். மனைவி வழி சார்ந்த உறவினர்களிடம் முன் யோசனையுடன் பழகுவீர்கள். தொழில் வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். பணியாளர்கள் கால அவகாசத்தில் பணி இலக்கு நிறைவேற்றுவர். வெளியூர் பயணம் மாறுதலுக்கு உட்படலாம். பெண்கள் பணம் சேமிப்பதில் ஆர்வம் கொள்வர். பரிகாரம் :  துர்க்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.       

துலா ராசிபலன் : 29.3.2020 முதல் 4.4.2020 வரை

Image
துலாம்: சமயோசித செயலால் சாதனை புரியும் துலாம்ராசி அன்பர்களே! உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய யுக்தியுடன் பணிகளை துவங்குவீர்கள். சமூக நிகழ்வு இனிய அனுபவம் தரும். வாகன பயன்பாடு அளவுடன் இருக்கும். புத்திரர் உங்கள் வழிகாட்டுதல்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வர். உறவினர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். வழக்கு விவகாரத்தில் சுமுக தீர்வு ஏற்படும். மனைவியின் செயல்களில் சிறு குளறுபடி வரலாம். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் பெறுவர். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகரிக்கும். பணியாளர் நிர்வாகத்திடம் நன்மதிப்பு சலுகை பெறுவர். பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த உதவுவர்.  பரிகாரம்:  அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்

கன்னி ராசிபலன் : 29.3.2020 முதல் 4.4.2020 வரை

Image
கன்னி: தான் செய்த உதவியை பிறரிடம்  பேசாத கன்னிராசி அன்பர்களே! குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பேசுவதில் நிதானம் இருக்கும். நண்பரின்  உதவி திருப்திகர அளவில்  கிடைக்கும். புதிய வாகனம் வாங்குகின்ற முயற்சி நிறைவேறும். புத்திரர் மனதில் ஆன்மிக எண்ணம் வளரும்.படிப்பு வேலையிலும் முன்னேறுவர். சத்தான உணவு உண்டு மகிழ்வீர்கள். ஆடம்பர பணச்செலவுகளை  தவிர்க்கவும்.  மனைவி குடும்ப நலனில் அக்கறை கொள்வார். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய அணுகுமுறை பின்பற்ற வேண்டும். பணியாளர்கள் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும். பெண்கள் அக்கறையுடன் குடும்பநலன் பாதுகாத்திடுவர். பரிகாரம்: முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

சிம்ம ராசிபலன் : 29.3.2020 முதல் 4.4.2020 வரை

Image
சிம்மம்: லட்சியத்தில் உறுதியுடன் செயல்படும் சிம்மராசி அன்பர்களே! குடும்ப பெரியோர்களிடம் அமைதி காக்கவும். அக்கம் பக்கத்தவர் அன்பு பாராட்டுவர். செயல்களில் நேர்த்தி உருவாகும். உடன்பிறந்தவருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். வீடு வாகனத்தில் பராமரிப்பு செய்வீர்கள். பூர்வ சொத்தில்  அளவான பணவரவு கிடைக்கும். புத்திரர் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படுவதில் ஆர்வம் கொள்வர்.  மனைவியிடம் உறவினர் குடும்ப விவகாரம் பேச வேண்டாம். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் அதிக உழைப்பு நல்ல பலன் தரும். பணியாளர்கள் பணியிடச்சூழல் உணர்ந்து செயல்படவும்.பெண்கள் பிறர்க்காக பணப்பொறுப்பு ஏற்க கூடாது.     பரிகாரம்: சிவன் வழிபாடு சகல நன்மை தரும்.      

கடக ராசிபலன் : 29.3.2020 முதல் 4.4.2020 வரை

Image
கடகம்: பணச்செலவில் சிக்கனம் பின்பற்றும் கடகராசி அன்பர்களே!  மற்றவர்களுக்கு செய்த உதவியால் மேன்மை உண்டாகும். திட்டமிட்ட பணிகள் சிறப்பாக நிறைவேறும். நண்பர்களின் உதவி கிடைக்கும். நற்பெயரும் புகழும் தேடி வரும். விலகிய தாய்வழி உறவினர் விரும்பி சொந்தம் பாராட்டுவர். புத்திரர் படிப்பு வேலையில் முன்னேற்றம் காண்பர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்து லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு  கூடுதல் சலுகை கிடைக்கும். பெண்கள் கலையம்சமுள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர். பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.

மிதுன ராசிபலன் : 29.3.2020 முதல் 4.4.2020 வரை

Image
மிதுனம்: இறையருள் பெற நல்வழியில் நடைபோடும் மிதுனராசி அன்பர்களே! குடும்ப உறுப்பினர்கிடம் பேசும்போது பேச்சில் கவனம் வேண்டும். திட்டமிட்ட செயல்கள் சிறப்பாக நிறைவேறும். பணப்பரிவர்த்தனை அதிகரிக்கும். புதிய வீடு வாகனம் வாங்க நல்யோகமுண்டு. புத்திரர் பெற்றோர் சொல் கேட்டு நடந்து பெருமை சேர்ப்பர். உடல் ஆரோக்கியம் பலம்பெறும். மனைவியின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை செழித்து வளரும்.பணப்பரிவர்த்தனை கூடும். அரசாங்க உதவி எளிதாக பெறலாம். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் விரும்பிய புத்தாடை நகை வாங்குவர். பரிகாரம்: பசு வழிபாடு செல்வ வளம் தரும்.

ரிஷப ராசிபலன் : 29.3.2020 முதல் 4.4.2020 வரை

Image
ரிஷபம்: அடுத்தவரின் நற்செயலை பாராட்டும் ரிஷபராசி அன்பர்களே!       குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மனதின் உற்சாகம் செயலில் பரிமளிக்கும். குடும்பத்தில்  சுபநிகழ்வு ஏற்படும். பொதுநலப்பணிபுரிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தாய்வழி உறவினர் உதவுவர்.குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி நிறைந்திருக்கும். புத்திரர் அறிவாற்றல் செயல்திறனில் மேம்படுவர். எதிர்ப்பாளர்கள் விலகுவர். நோய்  குறையும். மனைவியின் மனதில் நம்பிக்கை வளரும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். பணியாளர் கூடுதல் வேலை வாய்ப்பை ஏற்றுக் கொள்வர். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கி  நண்பர்களுக்கும் உதவுவர். பரிகாரம்: விநாயகர் வழிபாடு வெற்றியளிக்கும்.

மேஷ ராசிபலன் : 29.3.2020 முதல் 4.4.2020 வரை

Image
மேஷம்: வாக்குறுதி தருவதில் நிதானம் பின்பற்றும் மேஷராசி அன்பர்களே!  சாதுர்யமாக பேசுவதன் மூலம் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். பணிகளில்  சுறுசுறுப்பும் நேர்த்தியும் உருவாகும். உடன்பிறந்தவர்கள் கருத்திணக்கம் கொள்வர். வீடு வாகனத்தில் அதிக பாதுகாப்பு வேண்டும்.புத்திரரின் ஆர்வமிகு செயல் குளறுபடியாகலாம். சொத்து ஆவணம் பிறர் பொறுப்பில் தரக்கூடாது. மனைவியின் நற்செயல்களை முழுமனதுடன் பாராட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி கூடும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும்.  பெண்கள் கணவரின் அன்பு பாசத்தில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பில்  பரிசும் பாராட்டும் பெறுவர். பரிகாரம்: குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.           

தாவூத் ஷா: தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை

Image
தாவூத் ஷா: தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை பெரியாருடன் பல சந்தர்ப்பங்களில் இணைந்து செயல்பட்டிருக்கிறார். ‘‘தாருல் இஸ்லாம் பத்திரிகையும், அதன் ஆசிரியரும் நமது கூட்டத்தைச் சார்ந்தவர்கள்” என்றார் பெரியார். “என் பள்ளிப்பருவத்தில் ஒரு கையில் குடியரசுப் பத்திரிகையும், மறுகையில் தாருல் இஸ்லாம் இதழும் இருக்கும்” என்று கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார். இதனால் கும்பகோணம் வட்டாரத்தில் இவரை கம்ப ராமாயண சாகிபு என்றழைத்தனர். அவரது முக்கியப் பங்களிப்பு குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்த்ததாகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் குர் ஆனை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்து அதற்கு விளக்க உரை எழுதியவர் தாவூத் ஷா தான். இஸ்லாமிய வரலாற்றில் குர்ஆனை அரபு அல்லாத மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு மத அறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. அதன் புனிதத்தன்மை கெட்டுவிடும் என்று அவர் கள் கருதியதே அதற்குக் காரணம். அதையும் மீறி கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையி லும் தாவூத் ஷா அதனை வெளிக்கொண்டு வந்தார். ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய நவீனக் கல்வி முறையின் மீதான ஒவ்வாமை முஸ்லிம் மத அறிஞர்கள் மத்தியில் ஏற்பட்ட க

கலைவாணர் புகழின் உச்சியில் இருந்தபோது அவரது வாழ்க்கையை முடக்கிப்போட்டது ஒரு வழக்கு

Image
கலைமேதை என்.எஸ்.கிருஷ்ணன்! கலைவாணர் புகழின் உச்சியில் இருந்தபோது அவரது வாழ்க்கையை முடக்கிப்போட்டது ஒரு வழக்கு. சிரிக்க வைத்தவர் சிந்திக்க வைத்தவர் சிரிப்பின் சிறப்பை சிந்திக்க வைத்தவர் சிந்திக்க தெரிந்த மனித இனத்துக்கே சிரிப்பே சொந்தகை இருப்பு என்றவர் வேட்டி கீட்டி வேல கீல பாட்டி கீட்டி என்பதைப் போல என்பேரை உன்னால் சொல்ல முடியுமா? என்று கேட்டவர்க் கின்று சொல்வேன் என் எஸ் கிருஷ்ணன் கின்னஸ் கிருஷ்ணன் என் எஸ் கிருஷ்ணன் கின்னஸ் கிருஷ்ணன் ஆஅ ஈஇ ஊஉ ஏஎ ஆஅ ஈஇ ஊஉ ஏஎ சங்கீத மாக சிரிக்க வைத்தவர் சிரிப்பாய் என்றும் நினைவில் நிற்பவர்... 1950 களின் மத்தியில் பிரம்மாண்டமாக நடந்தது அந்த விழா. விழாவில் பங்குபெற்றோர் அந்நாளைய பிரபல நட்சத்திரங்கள். அந்த விழாவை எடுத்து நடத்தியதும், அந்நாளில் மக்களால் பெரிதும் போற்றப்பட்ட ஒரு நட்சத்திரம்தான். ஆனால் இத்தனை அம்சங்களுடன் நடந்த அந்த விழாவின் நாயகன், பிரபல நட்சத்திரமோ, பிரபலமான பிரமுகரோ அல்ல: ஒரு சாதாரண கார் ஓட்டுநர். தனக்கு கார் ஓட்டிய ஒரு ஊழியருக்கு பாராட்டு விழா எடுத்த அந்த மனிதர் வேறு யாருமல்ல; “என்னை மனிதாபிமானி என்று யாராவது அழைத்தீர்களானால் அ

பங்குச் சந்தை 1411 புள்ளிகள் மீட்சி

Image
பங்குச் சந்தை 1411 புள்ளிகள் மீட்சி வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான வியாழக்கிழமை இந்தியச் சந்தைகள் உயர்ந்து துவங்கின. அதன் பின்னர் சந்தைகள் உயர்ந்தே வர்த்தகமாகி வர்த்தக நேர முடிவில் மீட்சி அடைந்து முக்கிய குறியீட்டெண்கள் உயர்ந்து நிலைபெற்றன. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 1411 புள்ளிகள் அல்லது 4.94 சதவீதம் உயர்ந்து 29,946.77 புள்ளிகளில் நிறைவடைந்தது. தரக் குறியீட்டுப் பங்குகளில் 30 பங்குகளில் 26 பங்குகள் உயர்வை கண்டன 4 பங்குகள் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் காலையில் 538 புள்ளிகள் உயர்ந்து 29,073.71 புள்ளிகளில் துவங்கியது. குறைந்தபட்சமாக 28,566.34 புள்ளிகளுக்கும், அதிகபட்சமாக 30,099.91 புள்ளிகளுக்கும் சென்று வர்த்தக நேர முடிவில் 29,946.77 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 324 புள்ளிகள் அல்லது 3.89 சதவீதம் உயர்ந்து 8,641.45  புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையின் 50 முதல் தரப் பங்குகளில் 39 பங்குகள் உயர்வை பெற்றன. 11 பங்குகள் இழப்பைச் சந்தித்தன. காலையில் நிஃப்டி 133புள்ளிகள் வரை உயர்ந்து 8,451.00 புள்ளிகளில் துவங்கியது. குறைந்த பட்சமாக

பங்குச் சந்தை 693 புள்ளிகள் மீட்சி

Image
பங்குச் சந்தை நிலவரம் வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமை இந்தியச் சந்தைகள் மீ்ட்சி பெற்றன. அதன் பின்னர் சந்தைகள் உயர்ந்தே வர்த்தகமாகியது.  இதையடுத்து முக்கிய குறியீட்டெண்கள் உயர்ந்து நிலைபெற்றன. . மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 693 புள்ளிகள் அல்லது 2.67 சதவீதம் உயர்ந்து 26,674.03 புள்ளிகளில் நிறைவடைந்தது. தரக் குறியீட்டுப் பங்குகளில் 30 பங்குகளில் 21 பங்குகள் உயர்வை கண்டன 9 பங்குகள் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் காலையில் 1075 புள்ளிகள் உயர்ந்து 27,056.23 புள்ளிகளில் துவங்கியது. குறைந்தபட்சமாக 25,638.90 புள்ளிகளுக்கும், அதிகபட்சமாக   27,462.87 புள்ளிகளுக்கும் சென்று வர்த்தக நேர முடிவில் 26,674.03 புள்ளிகளில் நிலைபெற்றது. சென்செக்ஸ் காலையில் 1075 புள்ளிகள் வரை உயர்ந்து துவங்கியது. பின்னர் 1417  புள்ளிகள் வரை குறைந்து வர்த்தக நேர இறுதியில் 382 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றன. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 2426 பங்குகளில் 923 பங்குகள் முன்னேற்றம் கண்டன. 1337 பங்குகள் பின்னடைவைச் சந்தித்தன. 166பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. தேசிய பங்குச் சந்தைய

பங்குச் சந்தை கட்டுக்கடங்காத சரிவு

Image
பங்குச் சந்தை  3935 புள்ளிகள் சரிவு இந்த வாரத்தின் முதலாவது வர்த்தக நாளான திங்கட்கிழமை இந்தியச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. அதன் பின்னர் சந்தைகள் தடுமாற்றத்துடன் வர்த்தகமாகிய நிலையில் வர்த்தக நேர இறுதியில் மீட்சி பெற வழியில்லாமல் கடும் சரிவை அடைந்தன. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 3934.72 புள்ளிகள் அல்லது 13.15 சதவீதம் குறைந்து 25,981.24 புள்ளிகளில் நிறைவடைந்தது. தரக் குறியீட்டுப் பங்குகளில் 30 பங்குகளில் அனைத்து பங்குகளுமே சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் காலையில் 2307 புள்ளிகள் குறைந்து 27,608.80 புள்ளிகளில் துவங்கியது. குறைந்தபட்சமாக 25,880.83 புள்ளிகளுக்கும், அதிகபட்சமாக  27,900.83 புள்ளிகளுக்கும் சென்று வர்த்தக நேர முடிவில் 25,981.24 புள்ளிகளில் நிலைபெற்றது. சென்செக்ஸ் காலையில் 2307 புள்ளிகள் வரை குறைந்து துவங்கியது. பின்னர் 1728  புள்ளிகள் வரை குறைந்து வர்த்தக நேர இறுதியில் 1628 புள்ளிகள் சரிந்து நிலைபெற்றன. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 2401 பங்குகளில் 232 பங்குகள் முன்னேற்றம் கண்டன. 2037 பங்குகள் பின்னடைவைச் சந்தித்தன. 132 பங்குகள் மாற்றமின்றி ந

ஆடி அடங்கும் வாழ்கையடா ஆறடி நிலமே... சொந்தமடா... இன்று சீர்காழி எஸ், கோவிந்தராஜன் நினைவு தினம் மார்ச் 24, 1988

Image
பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் நினைவு தினம்- மார்ச் 24, 1988 சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்  தமிழ் கருநாடக இசைப் பாடகரும் திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். வாழ்க்கைக் குறிப்பு பெயர் : சி.கோவிந்தராசன் பிறப்பு:19 ஜனவரி 1933; இறப்பு:24 மார்ச் 1988. பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள் சிவசிதம்பரம், அவையாம்பாள் ஆகியோருக்கு சீர்காழியில் பிறந்த கோவிந்தராசன் தனது ஆரம்பக்கல்வியை சீர்காழி வாணிவிலாஸ்  பாட சாலையில் பயின்றார். இளமைப் பருவத்தில் விரும்பிப்பாடிய பாடல்கள் சில தியானமே எனது  - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் வதனமே சந்திர பிம்பமோ  - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் செந்தாமரை முகமே - பி.யூ.சின்னப்பா பாடிய பாடல் கோடையிலே இளைப்பாறி - எல்.ஜி.கிட்டப்பா பாடிய பாடல் இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள் : தேவி நாடக சபா, பாய்ஸ் கம்பெனி இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள் இசைமணி, சங்கித வித்வான் திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953 இல் பொன்வயல் என்வற படத்துக்காக சிரிப்புதான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல், ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி ந

மர்மமும் ஆச்சரியமும் நிறைந்த பாலைவனம்

Image
உலகம் பல இயற்கை அதிசயங்களை கொண்டுள்ளது. அந்த இயற்கை அதிசயங்கள் நம்மை எப்பொழுதும் ஆச்சிரியத்தை அளிப்பதற்கு  தவறுவதில்லை. பல விநோதங்களையும் ஆபத்துகளையும் ஆச்சிரியங்களையும் அற்புதங்களையும் தனக்குள் கொண்டு அமைதியாக இருக்கும் உலகின் அதிசயங்கள் தான் பாலைவனங்கள்.  புவியின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனமாகும். பாலைவனங்கள் வறண்ட நிலப்பகுதிகளைக் கொண்டு பகலில் மிகுந்த வெப்பமாகவும் இரவில் அதிக குளிருடன் காணப்படும்.பாலைவனம் என்றால் நம் நினைவிற்கு வருவது சஹாரா பாலைவனம் தான். ஆனால் நம் தமிழ்நாட்டில் பாலைவனம் உள்ளதென்று சொன்னால் உங்களுக்கு சற்று அதிர்ச்சிய மாக தான் இருக்கும். தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் பல மர்மங்களையும் அதிசயங்களையும் கொண்ட தேரிக்காடு பாலைவனம் அமைந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இரு மாவட்டங்களிலுமாக ஏறக்குறைய ஒரு பெரிய வட்டமான பகுதிபோல காட்சியளிக்கிறது  தேரிக்காடு பாலைவனம். இந்தியாவில் எங்குமே பார்க்கமுடியாத விசித்திரமான இடமாக இந்த இடம் விளங்குகிறது. மன்னார் வளைகுடாவை தெற்கு நோக்கி தென்கிழக்காக சற்றே சரிந்த நிலையிலுள்ள இந்த தேரிக்காடு பாலைவன

கொவைட்-19 வைரஸ்

Image
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 182725   பலியானவர்களின்  எண்ணிக்கை 7174   மீண்டவர்களின் எண்ணிக்கை 79883 கொரோனா வைரஸ் முதலில் பாதித்த இடம்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த டிசம்பா் மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் காரணமாக அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது. சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 774 பேரது உயிர்களை பலி கொண்ட சார்ஸ் வைரஸின் 70 சதவீதத் தன்மையை இந்த கொரோனா வைரஸ் ஒத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கொரோனா வைரஸ் மனிதா்களின் உடலில் பரவி பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் வகையைச் சேர்ந்ததாகும். இந்தியாவில் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் மகாராஷ்டிரா 38 கேரளா 24 உத்தரப்பிரதேசம் 14 ஹரியானா 14 கர்நாடகா 07 டெல்லி 06 ராஜஸ்தான் 04 லடாக் 03 தெலங்கானா 03 ஜம்மு காஷ்மீர் 02 உத்

முட்டு கிடா களம் - 4 | வீரத்தின் அடையாளம் முட்டு கிடா வளர்ப்பு | MADURAI ANCIANT SHEEP FIGHT

Image
மதுரை என்றால் அது வீரம்தான், அந்த வீரத்தின் அடையாளம் பல வகையான வீர விளையாட்டுகள் தான் அதில் பலரும் அறிந்தது சல்லிக்கட்டு , சிலர் மட்டுமே அறிந்தது கிடா சண்டை, சல்லிக்கட்டை போலவே கிடா சண்டையும் வீரத்தின் அடையாளம் தான்... கிடா வளர்ப்பில் அசத்தும் மதுரை ராம் மற்றும் அவரது நண்பர்கள்... தொடர்பு கொள்ள : ராம் - 6381534926 இந்த வீடியோ தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், மேலும் இது போன்ற வீடியோக்களுக்கு மறக்காமல் MEDIA TV MADURAI சேனலை SUBSCRIBE செய்து, எங்களை ஆதரியுங்கள் நன்றி... மீடியா டிவியின் நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்குபெற எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உலகத்திற்கு உங்களை தெரியப்படுத்துங்கள். தொடர்பு கொள்ள : MEDIA 1 TV MADURAI : 8883543999 #media1madurai #madurai