தஞ்சைபெரிய கோவிலைப்போன்று சோழ மன்னால் கட்டப்பட்ட மர்மங்கள் நிறைந்த மற்றும் ஒரு கோவில்...

Image
தஞ்சைபெரிய கோவிலைப்போன்று சோழ மன்னால் கட்டப்பட்ட மர்மங்கள் நிறைந்த மற்றும் ஒரு கோவில்...  ஆச்சிரியங்களும் மர்மங்களும் நிறைந்த கோவிலைப்பற்றி  காணலாம்.  அறிவியலுக்கும் புலப்படாத பல மர்ம முடிச்சுக்கள் கொண்டு, மர்ங்களால் சூழ்ந்து இருக்கும் கோவில் பூரி ஜெகந்நாதர் ஆலயம். அந்த கோவிலில் அப்படி என்னென்ன மர்ம அதிசயங்கள் இருக்கின்றன என்பது பற்றி விரிவாகப்  பார்க்கலாம் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வைணவத் தலம் தான் இந்த பூரி ஜெகநாதர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஜெகன்நாதர், பாலபத்திரர்(பலராமர்) மற்றும் சுமித்திரை தேவி இவர்கள் மூவரும் ஒரே கருவறையில் மூலவராக காட்சி தருகின்றனர்.  மற்ற இந்து கோயில்களை போல இல்லாமல் ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவரின்  சிலையானது புனித வேப்ப மரம் என்றழைக்கப்படும் தாரு பிரமத்தினால் செய்யப்பட்டதாகும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மூலவரின் சிலை அதே மரத்தினால் மறுவுருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிர்ஷ்டை செய்யப்படுகிறது.  ஆனால் இங்கு உள்ள சிலைகள் அனைத்தும் முழுமை பெறாததாகவே காட்சி தருகிறது. அறிவியலுக்கே சவால் விடுகின்ற, புலப்படாத பல மர்ம முடிச்சுகள் கொண்ட கோவில்

ஆடி அடங்கும் வாழ்கையடா ஆறடி நிலமே... சொந்தமடா... இன்று சீர்காழி எஸ், கோவிந்தராஜன் நினைவு தினம் மார்ச் 24, 1988



பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் நினைவு தினம்- மார்ச் 24, 1988
சீர்காழி எஸ்.கோவிந்தராஜன்  தமிழ் கருநாடக இசைப் பாடகரும்
திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு
பெயர் : சி.கோவிந்தராசன்
பிறப்பு:19 ஜனவரி 1933; இறப்பு:24 மார்ச் 1988.
பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள்

சிவசிதம்பரம், அவையாம்பாள் ஆகியோருக்கு சீர்காழியில் பிறந்த கோவிந்தராசன் தனது ஆரம்பக்கல்வியை சீர்காழி வாணிவிலாஸ் 
பாட சாலையில் பயின்றார்.

இளமைப் பருவத்தில் விரும்பிப்பாடிய பாடல்கள் சில
தியானமே எனது  - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
வதனமே சந்திர பிம்பமோ  - தியாகராஜ பாகவதர் பாடிய பாடல்
செந்தாமரை முகமே - பி.யூ.சின்னப்பா பாடிய பாடல்
கோடையிலே இளைப்பாறி - எல்.ஜி.கிட்டப்பா பாடிய பாடல்
இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள் : தேவி நாடக சபா, பாய்ஸ் கம்பெனி

இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்
இசைமணி, சங்கித வித்வான் திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953 இல் பொன்வயல் என்வற படத்துக்காக சிரிப்புதான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல், ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஒளவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார், திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.

திரைப்படத்துக்காக பாடிய பிரபல பாடல்கள் சில...
பட்டணந்தான் போகலாமடி - படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி
அமுதும் தேனும் எதற்கு - படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்
மாட்டுக்கார வேலா - படம்: வண்ணக்கிளி
வில் எங்கே கணை இங்கே  - படம்: மாலையிட்ட மங்கை
வானமிதில் நீந்தியோடும் - படம்: கோமதியின் காதலன்
கொங்கு நாட்டுச் செங்கரும்பே - படம்: கோமதியின் காதலன்
மலையே என் நிலையே - படம்: வணங்காமுடி
ஜக்கம்மா - படம்: வீரபாண்டிய கட்டபொம்மன்
பட்டணந்தான் போகலாமடி - படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி, 

பிரபல நகைச்சுவைப் பாடல்கள் சில..
பட்டணந்தான் போகலாமடி - படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி
மாமியாளுக்கு ஒரு சேதி - படம்: பனித்திரை
காதலிக்க நேரமில்லை - படம்: காதலிக்க நேரமில்லை
ஆசைக்கிளியே கோபமா  - படம்:சபாஷ் மீனா

ம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்கள்
சக்ரவர்த்தித் திருமகள், புதுமைப் பித்தன் மற்றும் ராஜராஜன் போன்ற படங்களில் எம்.ஜி.ஆருக்கான அனைத்து பாடல்களையும் இவரே பாடியிருந்தார்.

நிலவோடு வான்முகில் - படம்: ராஜராஜன் 
எல்லை இல்லாத இன்பத்திலே - படம்: சக்கரவர்த்தி திருமகள்
உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா - படம்: நாடோடி மன்னன்
ஒன்றல்ல இரண்டல்ல தம்பி - படம்: தாய் மகளுக்கு கட்டிய தாலி
யாருக்கு யார் சொந்தம் என்பது - படம்: சபாஷ் மாப்பிள்ளை 
ஓடிவந்து மீட்பதற்கு - படம்: நான் ஆணையிட்டால்
யாருக்கு யார் சொந்தம் என்பது - படம்: சபாஷ் மாப்பிளே
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான் - படம்: நல்லவன் வாழ்வான்

அழுத்தமான தமிழ் உச்சரிப்பால் ரசிகர்களை ஈர்த்த பாடல்கள்...
ஒற்றுமையாய் வாழ்வதாலே - பாகப்பிரிவினை 
எங்கிருந்தோ வந்தான் - படிக்காத மேதை 
ஓடம் நதியினிலே - காத்திருந்த கண்கள்
கோட்டையிலே ஒரு ஆலமரம் - முரடன் முத்து
நல்ல மனைவி நல்ல பிள்ளை - நம்ம வீட்டு லட்சுமி 
பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா - அக்கா தங்கை 
கண்ணான கண்மணிக்கு அவசரமா - ஆலயமணி 
கண்ணன் வந்தான் - ராமு


பிற ஆண் பாடகர்களுடன் பாடிய புகழ் பெற்ற பாடல்கள்...
கண்ணன் வந்தான் - படம் - ராமு
தேவன் வந்தான் - படம் - குழந்தைக்காக
வெள்ளிப் பனிமலையின்  - படம் கப்பலோட்டிய தமிழன்
இரவு நடக்கின்றது - உடன் பாடியவர்: டி.எம்.சௌந்திரராஜன்
ஆயிரம் கரங்கள் நீட்டி - படம் கர்ணன் 
பட்டணந்தான் போகலாமடி - அமுதும் தேனும் எதற்கு - உள்ளத்தில் நல்ல உள்ளம் - கண்ணன் வந்தான் - ஆடி அடங்கும் வாழ்க்கையடா - தேவன் கோவில் மணியோசை போன்ற பாடல்கள் இவருக்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுத் தந்தன. ஏராளமான பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.

சங்கீத அகாடமி விருது, இசைப் பேரறிஞர் விருது, பத்மவிபூஷன்  உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1983-ல் சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. சென்னை தமிழ் இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார்.

இசை அரங்குகளில் தமிழ்ப் பாடல்களையே பாடியவர். இலங்கை, லண்டன், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.

தெய்வத் திருமணங்கள், அகத்தியர், ராஜராஜசோழன் உள்ளிட்ட பல படங்களில் தனது அபார நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார்.
30 ஆண்டுகளுக்கு மேல் திரைப் பாடல்களையும், பக்திப் பாடல்களையும் தனித்துவம் வாய்ந்த தன் குரலால் பாடி, ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் 55-வது வயதில் மாரடைப்பால் (1988) காலமானார்.

நன்றி : திரு : மலைச்சாமி சின்னா அவர்கள் 

Comments

Popular posts from this blog

தாவூத் ஷா: தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை

முட்டு கிடா களம் - 4 | வீரத்தின் அடையாளம் முட்டு கிடா வளர்ப்பு | MADURAI ANCIANT SHEEP FIGHT