தஞ்சைபெரிய கோவிலைப்போன்று சோழ மன்னால் கட்டப்பட்ட மர்மங்கள் நிறைந்த மற்றும் ஒரு கோவில்...

Image
தஞ்சைபெரிய கோவிலைப்போன்று சோழ மன்னால் கட்டப்பட்ட மர்மங்கள் நிறைந்த மற்றும் ஒரு கோவில்...  ஆச்சிரியங்களும் மர்மங்களும் நிறைந்த கோவிலைப்பற்றி  காணலாம்.  அறிவியலுக்கும் புலப்படாத பல மர்ம முடிச்சுக்கள் கொண்டு, மர்ங்களால் சூழ்ந்து இருக்கும் கோவில் பூரி ஜெகந்நாதர் ஆலயம். அந்த கோவிலில் அப்படி என்னென்ன மர்ம அதிசயங்கள் இருக்கின்றன என்பது பற்றி விரிவாகப்  பார்க்கலாம் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வைணவத் தலம் தான் இந்த பூரி ஜெகநாதர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஜெகன்நாதர், பாலபத்திரர்(பலராமர்) மற்றும் சுமித்திரை தேவி இவர்கள் மூவரும் ஒரே கருவறையில் மூலவராக காட்சி தருகின்றனர்.  மற்ற இந்து கோயில்களை போல இல்லாமல் ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவரின்  சிலையானது புனித வேப்ப மரம் என்றழைக்கப்படும் தாரு பிரமத்தினால் செய்யப்பட்டதாகும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மூலவரின் சிலை அதே மரத்தினால் மறுவுருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிர்ஷ்டை செய்யப்படுகிறது.  ஆனால் இங்கு உள்ள சிலைகள் அனைத்தும் முழுமை பெறாததாகவே காட்சி தருகிறது. அறிவியலுக்கே சவால் விடுகின்ற, புலப்படாத பல மர்ம முடிச்சுகள் கொண்ட கோவில்

பங்குச் சந்தை கட்டுக்கடங்காத சரிவு

பங்குச் சந்தை  3935 புள்ளிகள் சரிவு

இந்த வாரத்தின் முதலாவது வர்த்தக நாளான திங்கட்கிழமை இந்தியச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. அதன் பின்னர் சந்தைகள் தடுமாற்றத்துடன் வர்த்தகமாகிய நிலையில் வர்த்தக நேர இறுதியில் மீட்சி பெற வழியில்லாமல் கடும் சரிவை அடைந்தன.



மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 3934.72 புள்ளிகள் அல்லது 13.15 சதவீதம் குறைந்து 25,981.24 புள்ளிகளில் நிறைவடைந்தது. தரக் குறியீட்டுப் பங்குகளில் 30 பங்குகளில் அனைத்து பங்குகளுமே சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் காலையில் 2307 புள்ளிகள் குறைந்து 27,608.80 புள்ளிகளில் துவங்கியது. குறைந்தபட்சமாக 25,880.83 புள்ளிகளுக்கும், அதிகபட்சமாக  27,900.83 புள்ளிகளுக்கும் சென்று வர்த்தக நேர முடிவில் 25,981.24 புள்ளிகளில் நிலைபெற்றது.

சென்செக்ஸ் காலையில் 2307 புள்ளிகள் வரை குறைந்து துவங்கியது. பின்னர் 1728  புள்ளிகள் வரை குறைந்து வர்த்தக நேர இறுதியில் 1628 புள்ளிகள் சரிந்து நிலைபெற்றன. மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 2401 பங்குகளில் 232 பங்குகள் முன்னேற்றம் கண்டன. 2037 பங்குகள் பின்னடைவைச் சந்தித்தன. 132 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 1135 புள்ளிகள் அல்லது 12.98 சதவீதம் குறைந்து 7,610.25 புள்ளிகளில் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையின் 50 முதல் தரப் பங்குகளில் 50 பங்குகளுமே சரிவைச் சந்தித்தன. காலையில் நிஃப்டி 800 புள்ளிகள் வரை குறைந்து 7,945.70 புள்ளிகளில் துவங்கியது. குறைந்த பட்சமாக 7,583.60 புள்ளிகளுக்கும் அதிகபட்சமாக 8,159.25 புள்ளிகளுக்கும் சென்று வர்த்தக நேர முடிவில் 7,610.25 புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசிய பங்குச் சந்தையில் வர்த்தகமான 2124 பங்குகளில் 129 பங்குகள் லாபம் கண்டன. 1703 பங்குகள் நஷ்டமடைந்தன. 292 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன.

Comments

Popular posts from this blog

தாவூத் ஷா: தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை

ஆடி அடங்கும் வாழ்கையடா ஆறடி நிலமே... சொந்தமடா... இன்று சீர்காழி எஸ், கோவிந்தராஜன் நினைவு தினம் மார்ச் 24, 1988

முட்டு கிடா களம் - 4 | வீரத்தின் அடையாளம் முட்டு கிடா வளர்ப்பு | MADURAI ANCIANT SHEEP FIGHT