தஞ்சைபெரிய கோவிலைப்போன்று சோழ மன்னால் கட்டப்பட்ட மர்மங்கள் நிறைந்த மற்றும் ஒரு கோவில்...

Image
தஞ்சைபெரிய கோவிலைப்போன்று சோழ மன்னால் கட்டப்பட்ட மர்மங்கள் நிறைந்த மற்றும் ஒரு கோவில்...  ஆச்சிரியங்களும் மர்மங்களும் நிறைந்த கோவிலைப்பற்றி  காணலாம்.  அறிவியலுக்கும் புலப்படாத பல மர்ம முடிச்சுக்கள் கொண்டு, மர்ங்களால் சூழ்ந்து இருக்கும் கோவில் பூரி ஜெகந்நாதர் ஆலயம். அந்த கோவிலில் அப்படி என்னென்ன மர்ம அதிசயங்கள் இருக்கின்றன என்பது பற்றி விரிவாகப்  பார்க்கலாம் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வைணவத் தலம் தான் இந்த பூரி ஜெகநாதர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஜெகன்நாதர், பாலபத்திரர்(பலராமர்) மற்றும் சுமித்திரை தேவி இவர்கள் மூவரும் ஒரே கருவறையில் மூலவராக காட்சி தருகின்றனர்.  மற்ற இந்து கோயில்களை போல இல்லாமல் ஜெகன்நாதர் ஆலயத்தின் மூலவரின்  சிலையானது புனித வேப்ப மரம் என்றழைக்கப்படும் தாரு பிரமத்தினால் செய்யப்பட்டதாகும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மூலவரின் சிலை அதே மரத்தினால் மறுவுருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் பிரதிர்ஷ்டை செய்யப்படுகிறது.  ஆனால் இங்கு உள்ள சிலைகள் அனைத்தும் முழுமை பெறாததாகவே காட்சி தருகிறது. அறிவியலுக்கே சவால் விடுகின்ற, புலப்படாத பல மர்ம முடிச்சுகள் கொண்ட கோவில்

கலைவாணர் புகழின் உச்சியில் இருந்தபோது அவரது வாழ்க்கையை முடக்கிப்போட்டது ஒரு வழக்கு




கலைமேதை என்.எஸ்.கிருஷ்ணன்!

கலைவாணர் புகழின் உச்சியில் இருந்தபோது அவரது வாழ்க்கையை முடக்கிப்போட்டது ஒரு வழக்கு.

சிரிக்க வைத்தவர் சிந்திக்க வைத்தவர்

சிரிப்பின் சிறப்பை சிந்திக்க வைத்தவர்

சிந்திக்க தெரிந்த மனித இனத்துக்கே

சிரிப்பே சொந்தகை இருப்பு என்றவர்

வேட்டி கீட்டி வேல கீல

பாட்டி கீட்டி என்பதைப் போல

என்பேரை உன்னால் சொல்ல முடியுமா?

என்று கேட்டவர்க் கின்று சொல்வேன்

என் எஸ் கிருஷ்ணன் கின்னஸ் கிருஷ்ணன்

என் எஸ் கிருஷ்ணன் கின்னஸ் கிருஷ்ணன்

ஆஅ ஈஇ ஊஉ ஏஎ

ஆஅ ஈஇ ஊஉ ஏஎ

சங்கீத மாக சிரிக்க வைத்தவர்

சிரிப்பாய் என்றும் நினைவில் நிற்பவர்...

1950 களின் மத்தியில் பிரம்மாண்டமாக நடந்தது அந்த விழா. விழாவில் பங்குபெற்றோர் அந்நாளைய பிரபல நட்சத்திரங்கள். அந்த விழாவை எடுத்து நடத்தியதும், அந்நாளில் மக்களால் பெரிதும் போற்றப்பட்ட ஒரு நட்சத்திரம்தான். ஆனால் இத்தனை அம்சங்களுடன் நடந்த அந்த விழாவின் நாயகன், பிரபல நட்சத்திரமோ, பிரபலமான பிரமுகரோ அல்ல: ஒரு சாதாரண கார் ஓட்டுநர்.

தனக்கு கார் ஓட்டிய ஒரு ஊழியருக்கு பாராட்டு விழா எடுத்த அந்த மனிதர் வேறு யாருமல்ல; “என்னை மனிதாபிமானி என்று யாராவது அழைத்தீர்களானால் அதற்கு முழு முதற் காரணமானவர் கலைவாணர்தான்” என மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் புகழப்பட்ட நகைச்சுவை மேதை, கலைவாணர் என தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட என்.எஸ். கிருஷ்ணன்தான் அது!

நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில், 1908 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். தந்தை சுடலைமுத்துப் பிள்ளை, தாயார் இசக்கி அம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே!

வறுமை காரணமாக நான்காம் வகுப்புடன் கலைவாணர் பள்ளிக்கூடப் படிப்பை நிறுத்தினார். பிறகு, நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்படித்தான் நாடக ஆர்வம் ஆரம்பம். பின்னாளில் நாடகங்களில் நடித்துவந்தார். ஆனந்த விகடனில் தான் எழுதிய 'சதிலீலாவதி' தொடரை அதே பெயரில் படமாக்கினார் எஸ்.எஸ்.வாசன். அதுதான் கலைவாணரின் முதல் படம். ஆனால், 'சதிலீலாவதி'யை முந்திக்கொண்டு அவரது 2 வது படமான 'மேனகா' வெளிவந்தது.

மேனகாவின் வெற்றியால், தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் கலைவாணரின் நகைச்சுவை மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களான பி.யு சின்னப்பா, தியாகராஜபாகவதர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திரையுலகில் புகழடைந்தபின், தானே சொந்தமாக தனது பாத்திரத்தன்மையை வடித்து, அதை படங்களில் பயன்படுத்தினார் கலைவாணர்.

திரைப்படத் துறையில் பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி, அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வெறுமனே சிரிக்க மட்டுமின்றி, சிந்திக்க வைக்கக்கூடியதாகவும், மேதமையாக இருந்தது அவரது நகைச்சுவை காட்சிகள். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.

வசந்தசேனா' படப்பிடிப்புக்காக கலைவாணர் அடங்கிய குழு, ரயிலில் புனே சென்றது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் ரயிலைத் தவறவிடவே, வழிச் செலவுக்கு மதுரத்தின் நகைகளை விற்றே குழுவினரின் பசியை தீர்த்தார் கலைவாணர். அந்தச் சமயம்தான் இருவருக்கும் காதல் பூத்தது. மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர். கலைவாணர்- மதுரம் ஜோடி திரையுலகில் பெரிதும் பேசப்பட்ட ஜோடி.

நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி, பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார். பழங்கலைகளின் பண்பு கெடாமல், அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர். அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.

என்.எஸ்.கே-யின் கிந்தனார் கதா காலட்சேபம் பிரபலம். நந்தனாரை கிந்தனார் ஆக்கியதற்கு மதுரம் கோபிக்கவே, 'பாரதியார் சாப்பிட வராமல் நந்தனாரை எழுதிக்கொண்டு இருந்தபோது, 'நந்தனாரும் வேண்டாம் கிந்தனாரும் வேண்டாம், சாப்பிட வாங்க!' என்று சலித்துக்கொண்டாராம் அவரது மனைவி செல்லம்மா. அதில் இருந்து உருவியதுதான் இந்த கிந்தனார்!' என்று மதுரத்தைச் சமாளித்திருக்கிறார்.

ஒருமுறை என்.எஸ்.கே ரஷ்யப் பயணம் மேற்கொண்டார். அதுபற்றி நிருபர்கள் கேட்க, ' ரஷ்யாவில் அக்ரஹாரமும் இல்லை...சேரியும் இல்லை' என்று நறுக் என்று பதில் அளித்தார்.





அறிவியல் கருத்துக்கள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். தனது படம் ஒன்றில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என அவர் நகைச்சுவையாகவும், அதே சமயம் தீர்க்க சிந்தனையோடும் காட்சிகளை அமைத்தார். ஆச்சர்யமாக அத்தனையும் நடந்தேறியது. கலைவாணரின் தீர்க்க சிந்தனையை மக்கள் போற்றினர்.

திமுக மீதும், அதன் தலைவர்கள் மீதும் அன்பு கொண்டவராக இருந்தாலும் எக்காலத்திலும், ஒரு குறிப்பிட்ட கட்சிக்குரியவராக கலைவாணர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. எல்லா கட்சியிலும் அவரது அன்புக்குரியவர் இருந்தார்கள். “கலைஞன் கட்சிக்கு அப்பாற்பட்டவன். அவன் மக்களின் ரசிகன்” என்ற தன் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தார்.

மணமகள்' படத்தில் பத்மினியை அறிமுகப்படுத்தி, அவர் 'நாட்டியப் பேரொளி' பட்டம் பெறக் காரணமாக இருந்தார். அந்தப் படத்தில் பாலையாவின் நடிப்பைப் பாராட்டி, தனது விலை உயர்ந்த காரை அவருக்குப் பரிசளித்தார்.

இந்து நேசன்' என்ற பத்திரிகையின் ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில், கலைவாணருக்கும் தியாகராஜ பாகவதருக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாக கூறி இருவரும் கைதானார்கள். பல்வேறு மாதங்களுக்கு பின், லண்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் கலைவாணர் விடுவிக்கப்பட்டார். விடுதலைக்குப்பின்னும் விடுவிடுவென படங்களில் நடிக்கத் துவங்கினார் கலைவாணர்.

உங்க அப்பா எப்படி ரிலீஸ் ஆனார்னு தெரியுமா? கொலை நடந்த அன்று காருக்கு பெட்ரோல் போட்டதுக் கான ரசீது அவரிடம் இருந்தது. அதை வைத்துத்தான் அவர் விடுதலை ஆனார். - கலைவாணர் குடும்பத்தினரைப் பார்க்கும்போதெல்லாம் நீதிபதி கற்பகவிநாயகம் இப்படி சொல்லிச் சிரிப்பாராம். சிறையில் இருந்து விடுதலையான என்.எஸ்.கே-வுக்கு நடந்த பாராட்டு விழாவில்தான் அவருக்கு கலைவாணர்' என்று பட்டம் சூட்டப்பட்டது. பட்டம் சூட்டியவர் பம்மல் கே.சம்பந்தம் முதலியார்.

மேதைமையான அவரது நகைச்சுவையால் கலைவாணர், தென்னாட்டு சார்லி சாப்ளின் என அழைக்கப் பட்டார். ஆனால் இதற்கு கலைவாணரின் கருத்து என்ன தெரியுமா? "என்னைச் சிலர் தமிழ்நாடு சார்லி சாப்ளின்னு சொல்றாங்க. சார்லி சாப்ளினை ஆயிரம் துண்டுகள் ஆக்கினால் கிடைக்கும் ஒரு துண்டுக்குக்கூட நான் ஈடாக மாட்டேன்!" என்றார் என்.எஸ்.கே.தன்னடக்கமாக. தன் மனைவி மதுரத்திடம், “எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்று கூறும் நிலை வந்தால், நான் உயிரோடு இருக்கக் கூடாது!' என்று அடிக்கடி கூறுவாராம்.

தினமும் ஒரு பிச்சைக்காரர் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். ஏதோதோ காரணம் சொல்லி பணம் கேட்க, இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுகிறான்' என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்ல, ' ஏமாத்தி அவன் என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத் தானே சாப்பிடப் போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம். அத்தனை மனிதாபிமானி என்.எஸ்.கே

காந்தியை மிகவும் நேசித்த கலைவாணர், நாகர்கோவில் நகராட்சி பூங்காவில் தனது சொந்த செலவில் காந்தி நினைவுத் தூணை எழுப்பி அதில் கவிமணியின் கவிதைகளை இடம்பெறச் செய்தார். இது இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவரான கலைவாணர், அதற்காக தன் சொந்த நிலத்தையும் வழங்கியவர்.

சேலம் அருகே தாரமங்கலம் பஞ்சாயத்தில் நடைபெற்ற அண்ணாவின் படத் திறப்பு விழாதான் கலைவாணர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி. அதே போல் அண்ணா கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி, கலைவாணரின் சிலை திறப்பு விழா. கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின. நகைச்சுவை மேதையான அவர், அதையும் தன் பாணியில், 'மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே!" என்றாராம்.

நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர்..

டென்னிஸ் பால் பொறுக்கிப்போட்டும்,கடையில் பொட்டலம் மடித்தும் வாழ்க்கையை ஓட்டிய அவர் நாடக கம்பெனியில் நடிப்பவர்களுக்கு கலர் சோடா வாங்கித்தந்து நடிப்புலகுக்குள் நுழைந்தார் என்பதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் சேர்ந்து அதைவிட்டு ஓடியதற்காக காவல் நிலையம் போக வேண்டிய சூழல் எல்லாம் உண்டானது.

நகைச்சுவை நடிகர்களுக்கு என்று தனி ட்ராக் என்பதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர் கலைவாணர். அதையும் தன் முதல் படத்திலேயே தானே எழுதிக்கொண்டார். அப்படம் சதி லீலாவதி. பூனா சென்ற பொழுது மதுரம் அவர்களின் நகையை விற்று பணமில்லாமல் இருந்த படக்குழுவினரின் பசியை தீர்த்த என்.எஸ்.கேவுக்கும் அவருக்கும் காதல் பூத்தது. முதல் திருமணத்தை மறைத்துவிட்டார் கலைவாணர். பின் அதைப்பற்றி கேட்டதும் ,”அவனவன் ஆயிரம் பொய் சொல்றான் நான் ஒரு பொய் சொல்லித்தானே கல்யாணம் பண்ணினேன் !” என்றாரே பார்க்கலாம்

திருடன் ஒருவன் வீட்டுக்கு வந்து திருட முயன்ற பொழுது மதுரம் சத்தம் போட அவனுக்கு சோறு போட்டு "இவன் என் நாடக கம்பெனி ஆள் !"என்றவர் என்.எஸ்.கே. இட்லி கிட்லி நந்தனார் கிந்தனார் என்று நக்கல் அடிக்கும் பாணியை அவரே துவங்கி வைத்தார்.

சீர்திருத்த கருத்துக்களை படங்களில் இயல்பாக கொண்டு சேர்த்தார் அவர். தன்னுடைய நிலம் முழுவதையும் ஊர் மக்களுக்குப் பொதுவாக்கி, கூட்டுஉழைப்பால் கிடைக்கும் பலனை ஊர் மக்கள் ஒற்றுமையாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நல்லத்தம்பி படத்தில் வலியுறுத்தினார். தீண்டாமை மற்றும் மதுவை எதிர்த்தும் அவர் குரல் கொடுத்தார். கிந்தனார் நாடகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். இது எதுவும் அறிவுரை போல இருக்காது என்பது தான் கலைவாணரின் முத்திரைக்கு சான்று

அண்ணா காஞ்சியில் தேர்தலில் போட்டியிட்ட பொழுது அவரை எதிர்த்து நின்று மருத்துவரைப்புகழ்ந்து நெடுநேரம் பேசி விட்டு,”இப்படிப்பட்ட மருத்துவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பிவிட்டால் யார் உங்களுக்கு சேவை செய்வார்கள் ? அண்ணாவுக்கு ஓட்டுப்போடுங்கள் !” என்றார் என்.எஸ்.கே.

என்.எஸ்.கே தான் எடுத்த படத்தில் எம்.ஆர்.ராதாவை வில்லனாக போடாமல் போய் விடவே அவரை கொல்ல துப்பாக்கியை தயார் செய்துகொண்டிருந்த விஷயம் தெரிந்து என்.எஸ்.கே நேரிலே வந்து ,”ராதா நீ எவ்வளவு பெரிய நடிகன் ;உன்னை நான் இப்படி நடி அப்படி நடி என அதட்டி வேலை வாங்க முடியுமா ?அதான் போடலை என்றதும் அவரிடம் துப்பாக்கியை நீட்டி தன்னைச்சுட சொன்னார் ராதா .

என்.எஸ். கே லக்ஷ்மிகாந்தன் வழக்கில் சிறை சென்று மீண்ட பின் நடித்த படங்களிலும் மின்னினார். அதே சமயம் தியாகராஜ பாகவதரால் அந்த மாயத்தை நிகழ்த்த முடியவில்லை. சிறை மீண்ட பின் அவருக்கு கலைவாணர் பட்டத்தை ஸ்ரீநடராஜா கல்விக் கழக இலவச வாசகர் சாலையில் பம்மல் சம்பந்த முதலியார் வழங்கினார்

என்.எஸ். கே கொடுத்து கொடுத்தே கரைந்து போனவர். ஹனுமந்த் ராவ் எனும் வருமான வரித்துறை அதிகாரி இவரின் கணக்காளரிடம் “என்ன இது எல்லா இடத்திலும் தர்மம் தர்மம் அப்படின்னு எழுதி இருக்கு ?” என்று கேட்ட பொழுது அவர் சொன்னபடியே தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமல் கலைவாணரை சந்தித்து தன் மகள் திருமணத்துக்கு பணம் வேண்டும் என்று கேட்க உடனேபணத்தை எடுத்து கொடுத்திருக்கிறார் கலைவாணர். “நீங்கள் கிருஷ்ணன் இல்லை கர்ணன் !” என்றார் அதிகாரி

நாங்கள் கொள்ளை அடிக்கிறோம் என்பதும் எங்களால் நன்மையை விடக் கேடே அதிகம் என்பதும், எங்களைத் திருத்த வேண்டும் என்பதே சரியான அவசியமானதுமாகும். இதில் என்ன தப்பு ? "என்று சினிமாவால் மக்கள் பாழ்படுகிறார்கள் என்கிற பெரியாரின் விமர்சனத்துக்கு பதில் சொன்னார்.

அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் . ” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நாற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு

ஒரு கட்டத்தில் கல்லீரல் பாதிப்பால் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார் என்.எஸ்.கே. ஆனால் தொடர்ந்து உடல்நிலை மோசமானது. மருத்துவர்கள் கை விரித்துவிட்டனர். மருந்து உண்பதை நிறுத்திவிட்டார். 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி தனது 49-வது வயதில் காலமானார். தன் நகைச்சுவையால் தமிழகத்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை மேதை தமிழர்களை ஒரே முறை தன் இறப்பின் மூலம் அழவைத்தார். உலகிலேயே நகைச்சுவை நடிகர்களில் இருவருக்கு மட்டும்தான் சிலை அமைக்கப்பட்ட பெருமை உண்டு. ஒருவர் சார்லின் சாப்ளின், மற்றொருவர் கலைவாணர்.

ஒன்றுமே இல்லாமல் மருத்துவமனையில் இறப்பதற்கு முன்னர் கலைவாணர் கடைசி சொத்தான வெள்ளி கூஜாவையும் தனது திருமணம் என்று சொன்ன தொழிலாளிக்கு தந்துவிட்டுத்தான் அவரின் மூச்சு ஓய்ந்தது. தன் மனைவி மதுரத்திடம் இப்படிச்சொன்னார் ,"நான் ஐம்பது வயசுக்குள்ள இறந்துடணும் மதுரம். ஒரு கலைஞன் தன்னோட கலை வறண்டு போறதுக்கு முன்னாடி இறந்துடணும் !" என்று


சொன்னபடியே நாற்பத்தி ஒன்பது வயதில் மரணமடைந்தார்

Comments

Popular posts from this blog

தாவூத் ஷா: தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை

ஆடி அடங்கும் வாழ்கையடா ஆறடி நிலமே... சொந்தமடா... இன்று சீர்காழி எஸ், கோவிந்தராஜன் நினைவு தினம் மார்ச் 24, 1988

முட்டு கிடா களம் - 4 | வீரத்தின் அடையாளம் முட்டு கிடா வளர்ப்பு | MADURAI ANCIANT SHEEP FIGHT